கோவை - நாகர்கோவில் ரெயில் சேவை பகுதியளவு ரத்து

பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
கோவை,,
மதுரை கோட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் பொறியியல் பணிகளை எளிதாக்குவதற்காக ரெயில் சேவைகளின் முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
கோவையில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு (வண்டி எண்- 16322) இரவு 7.40க்கு நாகர்கோவில் சென்றடையும் எக்ஸ்பிரஸ் ரெயில் பகுதியளவு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
அதன்படி, திண்டுக்கல் மற்றும் நாகர்கோவில் இடையே ஆகஸ்ட் 1 முதல் 23 வரை (ஆகஸ்ட் 15ம் தேதி தவிர) பகுதியளவு ரத்து செய்யப்படும் எனவும் இந்த ரெயில் திண்டுக்கல் வரை மட்டுமே செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






