கோவை: தண்டவாளம் புதுப்பிக்கும் பணியால் ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்


கோவை: தண்டவாளம் புதுப்பிக்கும் பணியால் ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்
x

மேட்டுப்பாளையம்-போத்தனூர் ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

திருப்பூர்,

கோவை வடக்கு ரெயில்வே யார்டில் தண்டவாளங்கள் புதுப்பிக்கும் பணிகள் நடப்பதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) போத்தனூரில் இருந்து காலை 9.40 மணிக்கு மேட்டுப்பாளையத்துக்கு இயக்கப்படும் ரெயிலும் (வண்டி எண் 66612), பிற்பகல் 1.05 மணிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து போத்தனூருக்கு இயக்கப்படும் ரெயிலும் (வண்டி எண் 66615) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல் தாம்பரம்-மங்களூரு இடையே இயக்கப்படும் ரெயில் (வண்டிஎண் 16159), பாட்னா-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 22644), திப்ரூகர்-கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ், ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம்-கே.எஸ்.ஆர். பெங்களூரு எக்ஸ்பிரஸ் ஆகியன போத்தனூர்-இருகூர் வழியாக இயக்கப்படும். மேற்கண்ட தகவலை சேலம் கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி மரியா மைக்கேல் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story