கோவை: மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழப்பு

கோவை: மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழப்பு
கோவை,
கோயம்புத்தூர் வனக்கோட்டம் போளுவாம்பட்டி சரகத்துக்கு உட்பட்ட காப்புக்காட்டில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் காட்டுக்கு வெளியே குப்பேபாளையம் கிராம பகுதிக்கு அருகே பொது தடத்தில் புதிதாக மின்கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளன. அவ்வாறு நிறுவப்பட்ட ஒரு மின் கம்பத்தை நேற்று அதிகாலை ஆண் யானை சாய்த்தது.
இதனால் யானை மீது மின் கம்பிகள் விழுந்ததில் அது உயிரிழந்தது. பொது தடத்தை ஒட்டியுள்ள தோட்டத்து உரிமையாளர் அதிகாலையில் இதை பார்த்து தகவல் அளித்ததின் பேரில் வனத்துறையினர் அங்கு சென்று பார்வையிட்டனர். உயிரிழந்த யானைக்கு 25 வயது இருக்கும் என வனத்துறை தெரிவித்தனர். பின்னர் யானைக்கு பிரேத பரிசோதனை செய்து புதைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story






