வடகிழக்கு பருவமழையால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

டிட்வா புயல் தொடர் மழையினால் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் உழவர்களை காப்போம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
வடகிழக்கு பருமழையால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
டிட்வா புயல் தொடர் மழையினால் கூடுதல் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் டெல்டா உழவர்களைக் காப்போம்!
அக்டோபர் தொடங்கி, தற்போது வரையிலான வடகிழக்குப் பருவமழை கனமழையினால் சேதமடைந்துள்ள நெற்பயிர்கள் உள்ளிட்ட வேளாண் பயிர்கள் & வீடுகள், மனித உயிரிழப்புகள், கால்நடை பலி ஆகியவற்றுக்கு உடனடியாக மாநிலப் பேரிடர் நிதியில் (SDRF) இருந்து இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
வெள்ளப் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் அனைத்து இடங்களிலும் நீரை வடிய வைக்கும் பணிகளைத் தொடர்ந்து நேரடியாகக் கண்காணித்து வருகிறேன்.
முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் தேவைப்படும் காலம் வரை நமது அரசு வழங்கும், மக்களைக் காக்கும்!
என தெரிவிக்கப்பட்டுள்ளது.






