ராமர் குறித்த பேச்சு - வைரமுத்து மீது புகார்


Complaint against Vairamuthu for defaming Lord Rama
x
தினத்தந்தி 13 Aug 2025 3:00 PM IST (Updated: 13 Aug 2025 3:01 PM IST)
t-max-icont-min-icon

அண்மையில் நடந்த கம்பன் விழாவில் பங்கேற்ற கவிஞர் வைரமுத்து கம்ப ராமாயணத்தை மேற்கோள்காட்டி பேசினார்.

சென்னை,

ராமர் குறித்து அவதூறாக பேசியதாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைரமுத்து மீது புகாரளிக்கப்பட்டுள்ளது.

ராமபிரானுக்கு புத்தி சுவாதீனம் என அவதூறாக பேசியது ஒளிப்பரப்பானதாகவும், வைரமுத்து மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூரில் அண்மையில் நடந்த கம்பன் விழாவில் பங்கேற்ற கவிஞர் வைரமுத்து கம்ப ராமாயணத்தை மேற்கோள்காட்டி பேசினார். அப்போது கடவுள் ராமர் புத்தி சுவாதீனம் இல்லாதவர் என்றும், புத்தி சுவாதீனம் இல்லாதவர் குற்றம் செய்தால் தண்டனை குற்றமாகாது என்பது இந்திய தண்டனை சட்டம் என பேசி இருந்தார். அவரின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தநிலையில், தற்போது வைரமுத்து மீது புகாரளிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story