அ.தி.மு.க.வினருடன் தொடர்பு: சுல்தான்பேட்டை ஒன்றிய தி.மு.க. செயலாளர் பதவி பறிப்பு

மு.க.ஸ்டாலின், சட்டமன்ற தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.
சென்னை,
தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். அந்த வகையில், வால்பாறை, கிணத்துக்கடவு மற்றும் சூலூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை நேற்று சந்தித்த நிலையில், இன்று ஒட்டப்பிடாரம், ஆலங்குளம், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது, சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பதை ஆராய்ந்தார்.
இந்த நிலையில், கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் பி.வி.மகாலிங்கம் அ.தி.மு.க.வினருடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை பதவியில் இருந்து நீக்குவதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அவருக்கு பதிலாக சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளராக ஆர்.ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.






