பேட்மிண்டன் மைதானம் கட்டும் பணி: சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் நிதியுதவி


பேட்மிண்டன் மைதானம் கட்டும் பணி:  சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் நிதியுதவி
x

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார்.

சென்னை,

சென்னை கொளத்தூரில் கட்டப்பட்டு வரும் முதல்-அமைச்சர் சிறு விளையாட்டு அரங்கில் உள்ளரங்க பேட்மிண்டன் மைதானம் கட்டும் பணிக்காக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் ரூ.2¼ கோடிக்கான காசோலையை நேற்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை கூடுதல் தலைமை செயலாளர் காகர்லா உஷா, சென்னை பெருநகர் வளர்ச்சி குழும முதன்மை செயல் அதிகாரி சிவஞானம், எஸ்.டி.ஏ.டி. உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்.

1 More update

Next Story