தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து பிறந்த நாள் விழா: அமைச்சர் கீதாஜீவன் மரியாதை

தூத்துக்குடி நகர தந்தை என அழைக்கப்படும் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து 156வது பிறந்த நாள் விழா தூத்துக்குடியில் நடைபெற்றது.
தூத்துக்குடி
தூத்துக்குடி நகர தந்தை என அழைக்கப்படும் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து 156வது பிறந்த நாள் விழா தூத்துக்குடியில் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு அரசு சார்பில் தூத்துக்குடி எம்.ஜி.ஆர். பூங்கா அருகில் அமைந்துள்ள குரூஸ் பர்னாந்து மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி கமிஷனர் ப்ரியங்கா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதுபோல பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மரியாதை செலுத்தினர்.
Related Tags :
Next Story






