கடலூர்: திட்டக்குடி அருகே சாலை விபத்து; 9 பேர் பலி


கடலூர்:  திட்டக்குடி அருகே சாலை விபத்து; 9 பேர் பலி
x
தினத்தந்தி 24 Dec 2025 8:42 PM IST (Updated: 24 Dec 2025 9:24 PM IST)
t-max-icont-min-icon

விபத்தில் சிக்கிய 2 கார்களும் அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்து போய் விட்டன.

கடலூர்,

திருச்சியில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பஸ் கடலூர் மாவட்டம் எழுத்தூர் பகுதியில் இன்றிரவு சென்று கொண்டிருந்தபோது, பஸ்சின் முன்பக்க டயர் வெடித்து உள்ளது.

இதில், பஸ் தறிகெட்டு ஓடி விபத்தில் சிக்கியது. அது தடுப்பை உடைத்து கொண்டு எதிர் திசையில் சென்று, எதிரே வந்து கொண்டிருந்த 2 கார்கள் மீது மோதியது. இந்த விபத்தில், 2 கார்களில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 2 கார்களும் அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்து போய் விட்டன.

விபத்தில் பலர் காயமடைந்து உள்ளனர். தகவல் அறிந்து அந்த பகுதிக்கு சென்ற போலீசார் உடல்களை மீட்டனர். காயமடைந்த நபர்களை மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். இதனால், சென்னையில் இருந்து திருச்சி செல்ல கூடிய தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், சிகிச்சை பெற்ற 2 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வடைந்து உள்ளது.

1 More update

Next Story