டிட்வா புயலால் 3 பேர் பலி; தமிழக அரசு தகவல்

டிட்வா புயலால் 57 ஆயிரம் ஹேக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழுவு பகுதி புயலாக உருவானது. இந்த புயலுக்கு டிட்வா என பெயரிடப்பட்டுள்ளது. டிட்வா புயலால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், கனமழையால் விவசாய நிலங்கள் பாதிகப்பட்டுள்ளன.
இந்நிலையில், டிட்வா புயலால் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
தமிழகத்தில் டிட்வா புயல் , மழை தொடர்பான சம்பவங்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். தூத்துக்குடியில் ஒருவரும், தஞ்சாவூரில் ஒருவரும் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தனர். மயிலாடுதுறையில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். இதன் மூலம் டிட்வா புயலால் தமிழகத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 149 கால்நடைகளும் உயிரிழந்தன. டிட்வா புயலால் 57 ஆயிரம் ஹேக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது
என்றார்.






