கடும் பனிமூட்டம்: சென்னையில் விமான சேவை பாதிப்பு

சென்னை விமான நிலையத்தில் 7 விமானங்கள் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகாலையில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்த பனிமூட்டம் காலை 8 மணி வரையில் நீடித்து வரும் நிலையில் சாலையில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பாடு மற்றும் வருகை என 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டெல்லி, வாரணாசி செல்லும் 4 விமானங்கள் மற்றும் சென்னைக்கு வருகை தரும் 3 விமானங்கள் ரத்தாகியுள்ளன
மேலும், 7 விமானங்கள் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் இயக்கம் குறித்து பயணிகள் அந்ததந்த நிறுவனங்களிடம் தெளிவாக அறிந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமானங்கள் ரத்தால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
Related Tags :
Next Story






