தீபாவளி பண்டிகை: சேலம் வழியாக இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் விவரம்


தீபாவளி பண்டிகை: சேலம் வழியாக இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் விவரம்
x

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

சேலம்,

சிறப்பு ரெயில்கள்

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 20-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ரெயில்வே நிர்வாகம் சார்பில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி போத்தனூர்-சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 06044) வருகிற 19-ந் தேதி இரவு 11.20 மணிக்கு போத்தனூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு திருப்பூர், ஈரோடு வழியாக சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்துக்கு நள்ளிரவு 2.10 மணிக்கு வந்தடைகிறது. பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து 2.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.45 மணிக்கு சென்னை சென்டிரலை சென்றடைகிறது.

இதேபோல் மறுமார்க்கத்தில் இருந்து இயக்கப்படும் சென்னை சென்டிரல்-போத்தனூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 06043) வருகிற 22-ந் தேதி சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் மதியம் 12.15 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை வழியாக மாலை 5.25 மணிக்கு சேலம் வந்தடைகிறது. அங்கிருந்து அந்த ரெயில் 5.35 மணிக்கு புறப்பட்டு இரவு 10 மணிக்கு போத்தனூர் ரெயில் நிலையத்தை சென்றடைகிறது.

சென்னை-மங்களூரு

மேலும் சென்னை சென்டிரல்-மங்களூரு சிறப்பு ரெயில் (வண்டி எண் 06001) வருகிற 20-ந் தேதி மதியம் 12.15 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து புறப்பட்டு காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக மாலை 5.25 மணிக்கு சேலம் வந்தடைகிறது. பின்னர் 5.35 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக மறுநாள் காலை 8 மணிக்கு மங்களூருவுக்கு சென்றடையும்.

மறுமார்க்கத்தில் மங்களூரு-சென்னை சென்டிரல் (வண்டி எண் 06002) வருகிற 21-ந் தேதி மாலை 4.35 மணிக்கு மங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு போத்தனூர், திருப்பூர், ஈரோடு வழியாக சேலத்துக்கு மறுநாள் அதிகாலை 3.40 மணிக்கு வந்தடைகிறது. பின்னர் இந்த ரெயில் 3.50 மணிக்கு புறப்பட்டு காலை 10.15 மணிக்கு சென்னை சென்டிரலுக்கு சென்றடைகிறது.

திருவனந்தபுரம்-எழும்பூர்

மேலும் திருவனந்தபுரம் வடக்கு-சென்னை எழும்பூர் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06108) வருகிற 21-ந் தேதி மாலை 5.10 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சேலத்துக்கு மறுநாள் காலை 5.07 மணிக்கு வருகிறது. பின்னர் 5.17 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக காலை 11 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடைகிறது. மறுமார்க்க மாக சென்னை எழும்பூர்-திருவனந்தபுரம் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06107) வருகிற 22-ந் தேதி மதியம் 1.25 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு சேலத்துக்கு இரவு 7.45 மணிக்கு வந்தடைகிறது. பின்னர் 7.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் ரெயில் நிலையத்துக்கு சென்றடைகிறது. இந்த ரெயில் நிலையத்துக்கான முன்பதிவு நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் தொடங்குகிறது. இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story