முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

காணொலி காட்சி வாயிலாக நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நாளை நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் "தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம்" நாளை (09-11-2025 ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். இதில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com