முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 13 Aug 2025 8:23 AM IST (Updated: 13 Aug 2025 9:39 AM IST)
t-max-icont-min-icon

ஓரணியில் தமிழ்நாடு - உறுப்பினர் சேர்க்கை குறித்து இதில் விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளநிலையில் திமுக தரப்பில் கட்சியினரிடம் இருந்து பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. 'உடன்பிறப்பே வா' என்ற பிரச்சாரம் மூலமாகத் தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வருகிறார்.

மேலும் தமிழ்நாடு முழுவதும் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற முன்னெடுப்பு மூலமாகப் புதிய உறுப்பினர்களை திமுக சேர்த்து வருகிறது. ஒவ்வொரு பூத்திலும் 30 சதவிகித உறுப்பினர்களை திமுகவில் சேர்க்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தநிலையில், பின்னர் அதனை 40 சதவிகிதமாக உயர்த்தி முதல்-அமைச்சர் அறிவித்தார். இந்த 'ஓரணியில் தமிழ்நாடு' பிரச்சாரம் வரும் 15ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதனை நீட்டிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு கூடுகிறது. அதில் ஓரணியில் தமிழ்நாடு - உறுப்பினர் சேர்க்கை குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக இதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டிருந்த அறிவிப்பில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இன்று (13.8.2025) (புதன்கிழமை) காலை 10.30 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும். இதில் "ஓரணியில் தமிழ்நாடு - உறுப்பினர் சேர்க்கை" என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இக்கூட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

1 More update

Next Story