திமுக, மக்களிடம் பிரிவினையை உண்டாக்குகிறது - தமிழிசை சவுந்தரராஜன்


திமுக, மக்களிடம் பிரிவினையை உண்டாக்குகிறது - தமிழிசை சவுந்தரராஜன்
x

பீகார் மக்களை கீழ்த்தரமாக பேசுவது திமுகவினர் என்றுதான் பிரதமர் மோடி கூறியதாக தமிழிசை தெரிவித்தார்.

சென்னை,

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பீகார் தேர்தல் பிரசாரத்தின்போது தமிழகத்தில் உள்ள பீகார் மக்கள் குறித்து பிரதமர் மோடி பேசியது குறித்து விளக்கம் அளித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் எதிர்வினையாற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது;

``பீகார் மக்களை கீழ்த்தரமாக பேசுவது திமுகவினர் என்றுதான் பிரதமர் சொன்னார். தமிழர்களை அல்ல. திமுகவில் எம்பிக்களாக இருக்கும் பாதி பேர் பச்சை தமிழர்களே கிடையாது. கணக்கெடுத்து பாருங்கள். நாங்கள் உங்களை வேறுப்படுத்தி பார்ப்பதில்லை. ஆனால் உங்கள் அமைச்சர்களும் எம்.பி.க்களும் பீகாரிகளை தரம் தாழ்த்தி பேசினார்களா இல்லையா? திரித்து பேசாதீர்கள். பீகாரி, வடக்கன் என பிரித்து பிரித்து மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தி கொண்டிருப்பது திமுக.

’பீகாரிகள் அறிவில்லாதவர்கள்.. அவர்கள் தமிழகத்தில் உள்ள வேலையை பறித்துக்கொள்கின்றனர்’ என்று திமுக அமைச்சர் கே.என்.நேரு கூறியிருந்தார். தயாநிதி மாறனும் பீகாரிகளை குறித்து தரக்குறைவாக பேசியுள்ளனர். பீகாரி உள்ளிட்ட வார்த்தைகளை பயன்படுத்தி வேறுபாட்டுடன் பிரித்து பேசும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனத்தை தெரிவிக்கிறேன். திமுக மீது வைக்கப்படும் விமர்சனங்கள் திமுக மீதுதான் வைக்கப்படுகிறது. தமிழர்கள் மீது அல்ல. ”

இவ்வாறு அவர் பேசினார்.

1 More update

Next Story