சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்.எல்.ஏ காலமானார்

சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்.எல்.ஏ பொன்னுசாமி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்.எல்.ஏ காலமானார்
Published on

சேந்தமங்கலம்,

சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்.எல்.ஏ பொன்னுசாமி காலமானார். அவருக்கு வயது 74. மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொன்னுசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 2001, 2006 ஆம் ஆண்டுகளில் சேந்தமங்கலம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.

பொன்னுசாமிக்கு ஏற்கனவே இரு முறை மாரடைப்பு ஏற்பட்டு, ஆஞ்சியோ செய்யப்பட்ட நிலையில், அவர் மூன்றாவது முறையாக ஏற்பட்ட மாரடைப்பில் உயிரிழந்தார்.ஆரம்பத்தில் அதிமுகவில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய பொன்னுசாமி, பிறகு திமுகவில் இணைந்தார். இவர் 2016ம் ஆண்டு திமுக சார்பில் சேந்தமங்கலம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். எனினும், கடந்த  2021 சட்ட சபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட  பொன்னுசாமி வெற்றி பெற்றார். 

பொன்னுசாமி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பொன்னுசாமி மறைவால்  சேந்தமங்கலம் தொகுதி காலியாகியுள்ளது.  எனினும், தமிழகத்தில் சட்ட சபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு இல்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com