நம்ம ஊரு பள்ளி திட்டம்: ரூ. 1,000 கோடியை தொட்டது நன்கொடை; நல்லுள்ளங்களுக்கு நன்றி - மு.க.ஸ்டாலின்

நம்மை வளர்த்த சமூகத்துக்கும், பள்ளிக்கும் உதவ உயர்ந்த உள்ளத்தோடு நிதி அளித்தோருக்கு நன்றி என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நம்ம ஊரு பள்ளி திட்டம்: ரூ. 1,000 கோடியை தொட்டது நன்கொடை; நல்லுள்ளங்களுக்கு நன்றி - மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களால், 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' என்ற முன்னோடி திட்டம் கடந்த டிசம்பர் 19, 2022 அன்று பள்ளிக் கல்வித் துறையின் கீழ் துவங்கி வைக்கப்பட்டது. பொதுமக்கள் மற்றும் குறு, சிறு, பெருநிறுவனங்களின் பங்களிப்புகளை பெற்று அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் திட்டமே 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி என்று அழைக்கப்பட்டது.

இந்தநிலையில், நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' முன்னெடுப்பில் இதுவரை ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகள் பெறப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் எக்ஸ் தள பதிவில்,

ஆயிரம் கோடியைத் தொட்டது #நம்மஸ்கூல்_நம்மஊருபள்ளி நிதி; நல்லுள்ளங்களுக்கு நன்றி! இந்த ஆண்டு மட்டுமே 46,767 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன் இந்தியாவிலேயே பள்ளிக்கல்வியில் பெரும் கவனம் செலுத்தி வருகிறது நமது #DravidianModel அரசு.

அரசின் முயற்சிகளுக்குப் பக்கபலமாக, 5 லட்ச ரூபாயை முதல் நன்கொடையாக வழங்கி, நான் தொடங்கி வைத்த 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' முன்னெடுப்பில் இதுவரை ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகள் பெறப்பட்டுள்ளது. அவற்றின் மூலம் ஆயிரக்கணக்கிலான #STEM ஆய்வகங்கள், Smart வகுப்பறைகள், நவீன கழிப்பறைகள், திறன் பயிற்சிகள் உள்ளிட்ட பணிகளை அரசுப் பள்ளிகளில் நிறைவேற்றியுள்ளோம்!

நம்மை வளர்த்த சமூகத்துக்கும் பள்ளிக்கும் உதவ வேண்டுமென்ற உயர்ந்த உள்ளத்தோடு பங்களித்த 885 நிறுவனங்கள் & 1,500 நன்கொடையாளர்களுக்கும் நனிநன்றிகள்.

இத்தனை பேரின் நம்பிக்கையைக் காப்பாற்றும்படி வெளிப்படைத்தன்மையோடும் நேர்மையாகவும் செயல்பட்டு, நற்பெயரைப் பெற்றுத் தந்துள்ள அன்பில் மகேஷ் மற்றும் #NSNOP அறக்கட்டளைத் தலைவர்வேணு சீனிவாசன் ஆகியோருக்குப் பாராட்டுகள். என அதில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com