தூத்துக்குடி துறைமுகத்தில் லாரி மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழப்பு


தூத்துக்குடி துறைமுகத்தில் லாரி மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழப்பு
x

தூத்துக்குடி துறைமுகத்தின் 8வது கப்பல் தளத்தில் லாரியில் இருந்து சரக்கு இறக்கி கொண்டிருந்தபோது லாரியின் அருகே நின்று கொண்டிருந்த லாரி டிரைவர் மீது எதிரே வந்த மற்றொரு லாரி மோதியது.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகேயுள்ள நடுகூட்டுடன்காடு வடக்கு தெருவைச் சேர்ந்த தேவேந்திரன் மகன் வெள்ளத்துரை (வயது 49), லாரி டிரைவர். இவர் புதிய துறைமுகத்தின் 8வது கப்பல் தளத்தில் லாரியில் இருந்து சரக்கு இறக்கி கொண்டிருந்தபோது லாரியின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு லாரி அவர் மீது மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தெர்மல்நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஷோபாஜென்சி வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரான ஆலந்தா கிராமம், நடுத் தெருவைச் சேர்ந்த நடராஜன் மகன் மகராஜன்(38) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Next Story