சேலம், நாமக்கல்லில் இன்று டிரோன்கள் பறக்க தடை


சேலம், நாமக்கல்லில் இன்று டிரோன்கள் பறக்க தடை
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி சேலம், நாமக்கல்லில் இன்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சேலம்,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாமக்கல் மாவட்டத்தில் இன்று நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்க உள்ளார்.

இதற்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் மாவட்டம் காமலாபுரம் விமான நிலையம் வருகிறார். பின்னர் அங்கிருந்து நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சென்னை திரும்ப உள்ளார். இதனையொட்டி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சேலம், நாமக்கல் மாவட்டங்களின் கலெக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story