திருச்சியில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை


திருச்சியில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை
x

ஜனாதிபதி திரவுபதி முர்மு தமிழகம் வந்துள்ளார்.

திருச்சி

ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வந்துள்ளார். சென்னை வந்துள்ள அவர், நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் சிட்டி யூனியன் வங்கியின் 120-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.

இதையடுத்து இரவு சென்னையில் தங்கும் ஜனாதிபதி முர்மு நாளை காலை விமானம் மூலம் திருச்சி செல்கிறார்.

திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் செல்கிறார். அங்கு நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்க உள்ளார்.

பின்னர் ஹெலிகாப்டர் மூலம் திருச்சி சென்று, ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். இதைத்தொடர்ந்து திரவுபதி முர்மு, நாளை மாலை திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

இந்நிலையில், ஜனாதிபதி வருகையையொட்டி திருச்சியில் இன்றும், நாளையும் (2 நாட்கள்) டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தடையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதேவேளை, ஜனாதிபதி வருகையையொட்டி திருச்சியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

1 More update

Next Story