சென்னையில் போதை பொருள் விற்பனை: 2 வாலிபர்கள் கைது

வாலிபர்களிடம் இருந்து 3.28 கிராம் மெத்தபெட்டமைன், புல்லட் வண்டி மற்றும் ஐ-போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னையில் போதை பொருள் விற்பனை: 2 வாலிபர்கள் கைது
Published on

சென்னை,

சென்னை, கோயம்பேடு பகுதியில் உயர் ரக போதை பொருள் விற்பனை நடப்பதாக தனிப்படை போலீசாக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார் கோயம்பேடு மார்க்கெட் அருகே உள்ள குமரன் நகர் பகுதியில் சந்தேகப்படும்படி புல்லட் வண்டியில் சுற்றி திரிந்த 2 வாலிபர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் அய்யப்பன்தாங்கலை சேர்ந்த சந்திரபிரகாஷ் (22) மற்றும் சாலிகிராமத்தை சேர்ந்த பூபாலன் (21) என்பதும் மெத்தபெட்டமைன் போதை பொருள் விற்பனை செய்து வருவதும் தெரிந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 3.28 கிராம் மெத்தபெட்டமைன், புல்லட் வண்டி மற்றும் ஐ-போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com