வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்திற்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

கோவையில் 56வது சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது.
கோவாவில் 56வது சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார். இதில் சினிமாவில் பல்வேறு சாதனைகள் படைத்த நடிகர் ரஜினிகாந்தை கவுரவிக்கும் வகையில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில், வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
கோவாவில் நடைபெற்ற 56-வது சர்வதேச திரைப்பட விழாவில், வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றுள்ள தமிழ்த் திரையுலகத்தின் சூப்பர்ஸ்டார்
ரஜினிகாந்திற்கு எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
50 ஆண்டுகளாக தனது திரை ஆளுமையால் தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து, உலகம் முழுக்க மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தை என்றும் ஈர்க்கும் வல்லமை கொண்ட ரஜினிகாந்த் எண்ணற்ற திரைச் சாதனைகளுக்கு அங்கீகாரமாக இவ்விருது அமைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
என தெரிவிக்கப்பட்டுள்ளது.






