பா.ஜ.க.வின் ஊதுகுழலாக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார்- ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்

பா.ஜ.க. சொல்ல வேண்டிய பதிலை எல்லாம் எடப்பாடி பழனிசாமி கூறி கொண்டிருக்கிறார் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்
சென்னை,
பா.ஜ.க.வின் ஊதுகுழலாக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார் என தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது,
தமிழகத்தில் சிறப்பாக நடக்கும் தி.மு.க. ஆட்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் கேவலமாக எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுகிறார். பா.ஜ.க.வின் ஊதுகுழலாக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு கொண்டிருக்கிறார். பா.ஜ.க. சொல்ல வேண்டிய பதிலை எல்லாம் எடப்பாடி பழனிசாமி கூறி கொண்டிருக்கிறார்.பா.ஜ.க.வுடன் கூட்டணி சேரும் முன்னர் ஒரு மாதிரி பேசினார். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்த பின்னர் வேறு மாதிரி பேசுகிறார் என்றார். என்று கூறினார்.
Related Tags :
Next Story






