

சென்னை,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு நாள் நாளை (5-ந்தேதி) கடை பிடிக்கப்படுகிறது. இதையொட்டி மெரினா கடற்கரையில் 'உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி அஞ்சலி செலுத்துகிறார்.
எடப்பாடி பழனிசாமியுடன் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான அ.தி.மு.க.வி னரும் கலந்து கொண்டு ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்கள்.
ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலாவும் நாளை மரியாதை செலுத்த உள்ளார். இதையொட்டி நினைவிடம் மற்றும் மெரினா கடற்கரை பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மெரினாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டால் வாகன போக்குவரத்தை மாற்று பாதைகளில் இயக்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.