சென்னை சென்டிரல்-சூலூர்பேட்டை இடையே நாளை மின்சார ரெயில்கள் ரத்து

சென்னை கடற்கரையில் இருந்து நாளை காலை 9.40, மதியம் 12.40, மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகின்றன.
சென்னை,
சென்னை சென்டிரல்-சூலூர்பேட்டை இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
"சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள கவரப்பேட்டை-கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை(வியாழக்கிழமை) மற்றும் வருகிற 7-ந் தேதி மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, சென்னை சென்டிரலில் இருந்து நாளை மற்றும் வருகிற 7-ந் தேதி காலை 10.30, 11.35 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதே போல, கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 1, 2.30, 3.15 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை சென்டிரலில் இருந்து நாளை காலை 10.15, மதியம் 12.10, 1.5 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதே போல, சூலூர்பேட்டையில் இருந்து மதியம்1,15, 3.10 இரவு 9 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து நாளை காலை 9.40, மதியம் 12.40, மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது. அதே போல, கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 10.55 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
சூலூர்பேட்டையில் இருந்து நாளை மதியம் 3.50 மணிக்கு புறப்பட்டு ஆந்திர மாநிலம் நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயிலும், நெல்லூரில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்டிரலில் இருந்து நாளை இரவு 11.40 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் ரெயில் ரத்து செய்யப்படுகிறது."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






