சென்னை - ஐதராபாத் விமானத்தில் இயந்திரக்கோளாறு - நடுவானில் பரபரப்பு


சென்னை - ஐதராபாத் விமானத்தில்  இயந்திரக்கோளாறு - நடுவானில் பரபரப்பு
x

இயந்திரக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து விமானம் மீண்டும் சென்னையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

சென்னை,

சென்னை விமான் நிலையத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்திற்கு இன்று மாலை இண்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று கிளம்பியது. இந்த விமானத்தில் 159 பயணிகள், 6 ஊழியர்கள் பயணித்தனர்.

இந்த நிலையில் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, இயந்திரக் கோளாறு ஏற்பட்டது தெரியவந்தது. இதனை அறிந்த பயணிகள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகினர். இதனையடுத்து அந்த விமானத்தை விமானி, மீண்டும் சென்னைக்கே திருப்பினார்.

விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. சென்னையில் பயணிகளுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதுடன், மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடுவானில் விமானத்தில் இயந்திரக்கோளாறு ஏற்பட்ட சம்பவம் பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 More update

Next Story