ஈரோடு: இடிந்து விழுந்த நுழைவு பால சுவர் - தற்காலிக இரும்பு தாங்கிகள் அமைத்து ரெயில்கள் இயக்கம்


ஈரோடு: இடிந்து விழுந்த நுழைவு பால சுவர் - தற்காலிக இரும்பு தாங்கிகள் அமைத்து ரெயில்கள் இயக்கம்
x

ஈரோடு - கரூர் மார்க்கத்தில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

ஈரோடு

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே சாவடிப்பாளையம் புதூர் என்ற இடத்தில் ஈரோடு-கரூர் மெயின்ரோட்டில் ரெயில்வே நுழைவு பாலம் உள்ளது. ஈரோட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்கள் அனைத்தும் இந்த ரெயில்வே மேம்பாலத்தின் வழியாகத்தான் சென்று வருகிறது.

இதனிடையே, கேட்புதூர் ரெயில்வே மேம்பாலத்தின் தடுப்புச்சுவர் நேற்று இரவு 8 மணி அளவில் திடீரென இடிந்து விழுந்தது. கான்கிரீட் தடுப்பு சுவர் இடிந்து விழும்போது அதிர்ஷ்டவசமாக எந்த வாகனமும் நுழைவு பாலத்தை கடக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த தண்டவாளத்தில் செல்லும் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் மிகுந்த அவதியடைந்தனர்.

இந்நிலையில், இடிந்து விழுந்த நுழைவு பால சுவர் தற்காலிகமாக சரிசெய்யப்பட்டுள்ளது. அதன்படி, இடிந்து விழுந்த கார்ன்கீரிட் பாலத்தில் தற்காலிக இரும்பு தாங்கிகள் பொருத்தப்பட்டு அந்த பாதையில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஈரோடு - கரூர் மார்க்கத்தில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதேவேளை, அந்த பாலம் வழியாக சாலைப்போக்குவரத்திற்கு தரை விதிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story