ஈரோடு: வளர்ப்பு நாய் கடித்ததில் உடல்நலம் பாதித்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு

ரமேஷை கடித்த அவரது வளர்ப்பு நாயை, சில நாட்களுக்கு முன்னர் தெரு நாய்கள் கடித்தது தெரியவந்துள்ளது.
ஈரோடு,
ஈரோடு அருகே வளர்ப்பு நாய் கடித்ததில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளோடு அருகே உள்ள கனகபுரம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் ரமேஷ், தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் ரமேஷை கடந்த 10 நாட்களுக்கு முன் அவரது வளர்ப்பு நாய் கடித்துள்ளது. ஆனால் உரிய சிகிச்சை எடுக்காமல் இருந்த ரமேஷ், கடந்த 3 நாட்களுக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரமேஷை கடித்த அவரது வளர்ப்பு நாயை, சில நாட்களுக்கு முன்னர் தெரு நாய்கள் கடித்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story






