ஈரோடு: கத்தியை காட்டி மிரட்டி சிறுமியிடம் பாலியல் சீண்டல் - சரித்திர பதிவேடு குற்றவாளி கைது

வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது 25-க்கும் மேற்பட்ட அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் ஈரோட்டைச் சேர்ந்த 13 வயது சிறுமியிடம், தமிழ்ச்செல்வன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். சிறுமியின் பெற்றோர் காலையில் வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்துள்ளார். இதனை நோட்டமிட்ட தமிழ்ச்செல்வன் வீட்டிற்குள் புகுந்து சிறுமியிடம் கத்தியை காட்டி மிரட்டி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
வீட்டிற்கு திரும்பிய பெற்றோரிடம் சிறுமி நடந்ததை கூறிய நிலையில், உடனடியாக அவர்கள் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் தமிழ்ச்செல்வனிடம் விசாரணை நடத்தியதில், அவர் சிறுமியிடம் கத்தியை காட்டி மிரட்டி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தமிழ்ச்செல்வனை கைது செய்தனர். தொடர்ந்து அவரை ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.