ஈரோடு: பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு


ஈரோடு: பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு
x

இதன் மூலம் அப்பகுதியில் உள்ள 15743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

ஈரோடு,

தமிழக நீர்வளத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

2025-2026-ஆம் ஆண்டு இரண்டாம் போக பாசனத்திற்கு, ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்காலிலுள்ள பாசன நிலங்களுக்கு 10.11.2025 முதல் 09.03.2026 வரை 120 நாட்களுக்கு, 5184.00 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

இதனால், ஈரோடு மாவட்டத்திலுள்ள ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டங்களிலுள்ள 15743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story