குடும்ப பிரச்சினையில் மனமுடைந்த மாணவி: விஷம் குடித்துவிட்டு பள்ளிக்கு வந்ததால் பரபரப்பு

குடும்ப பிரச்சினையில் மனமுடைந்த மாணவி விஷம் குடித்துவிட்டு பள்ளிக்கு வந்துள்ளார்.
குடும்ப பிரச்சினையில் மனமுடைந்த மாணவி: விஷம் குடித்துவிட்டு பள்ளிக்கு வந்ததால் பரபரப்பு
Published on

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 600-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு ஜங்களாபுரம் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர் பிளஸ்-1 படித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை 9 மணிக்கு அந்த மாணவி வழக்கம்போல பள்ளிக்கு வந்தார். அப்போது மாணவி சோர்வாக காணப்பட்டார். இதனால் அவரிடம் சக தோழிகள் உடல்நலம் சரியில்லையா? என்று கேட்டனர். அதற்கு அவர் தான் விஷம் குடித்துள்ளதாக கூறினார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகள் இதுகுறித்து ஆசிரியைகளிடம் கூறினர். பின்னர் அவர்கள் உடனடியாக மாணவியின் பெற்றோருக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் பள்ளிக்கு வந்து மகளை மீட்டு சிகிச்சைக்காக சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு மாணவிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். குடும்ப பிரச்சினையில் அந்த மாணவி மனமுடைந்து விஷம் குடித்துவிட்டு பள்ளிக்கு வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com