நெல்லையில் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: கலெக்டர் சுகுமார் அறிவிப்பு

நெல்லையில் 26ம் தேதி நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட விவசாயிகள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: கலெக்டர் சுகுமார் அறிவிப்பு
Published on

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 19.12.2025 அன்றுக்கு பதிலாக 26.12.2025 அன்று 4வது வெள்ளிக்கிழமை மாவட்ட கலெக்டர் சுகுமார் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் வைத்து காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க உள்ளார்கள். எனவே விவசாயிகள் குறை தீர்ப்பதற்காக நடைபெறும் இக்கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com