பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகள் நாளைக்குள் பதிவு செய்ய வேண்டும்: தமிழக அரசு தகவல்


பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகள் நாளைக்குள் பதிவு செய்ய வேண்டும்: தமிழக அரசு தகவல்
x

பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகள் நாளைக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேசிய பயிர் காப்பீட்டு வலைதளத்தில், சம்பா நெற்பயிர் காப்பீடு செய்ய செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் 15-ந்தேதி வரை காலநிர்ணயம் செய்யப்பட்டு பதிவு நடைபெற்று வந்தது. தொடர்ந்து 30-ந்தேதி வரை மத்திய அரசால் கால நீட்டிப்பு செய்யப்பட்டது.

தற்போது வரை 31.33 லட்சம் ஏக்கர் பரப்பில் சம்பா நெற்பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, 7.95 லட்சம் விவசாயிகளால் 19.06 லட்சம் ஏக்கர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த சாகுபடி பரப்பில் 61 சதவீதமாகும். இது கடந்த ஆண்டைவிட 1 லட்சம் ஏக்கர் கூடுதலாகும். மேலும், இந்த நீட்டிக்கப்பட்ட காலத்தில் 66 ஆயிரம் விவசாயிகளால் 1.63 லட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது, 30-ந்தேதி வரை காப்பீடு செய்ய கால நிர்ணயம் செய்யப்பட்ட பயிர்களை இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் டிசம்பர் 1-ந்தேதிக்குள் (நாளை) பதிவு செய்து கொள்ளலாம். நில உரிமையுள்ள அனைத்து விவசாயிகளும் உடனடியாக இ-சேவை மையத்தில் விவசாயி பதிவுமூலம் வழங்கப்படும் விவசாயிகள் அடையாள எண்ணை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில், 2024-2025-ம் ஆண்டிற்கான இழப்பீட்டுத் தொகையாக ரூ.794 கோடி ஒப்பளிக்கப்பட்டு இதுவரை, 4 லட்சம் விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் ரூ.697 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இழப்பீட்டுத்தொகை மத்திய அரசின் பங்குதொகையான ரூ.67 கோடி பெறப்பட்டவுடன் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story