சென்னைக்கு வந்த சரக்கு விமானத்தில் தீ விபத்தா? விமான நிலைய நிர்வாகம் மறுப்பு


சென்னைக்கு வந்த சரக்கு விமானத்தில்  தீ விபத்தா?  விமான நிலைய நிர்வாகம் மறுப்பு
x
தினத்தந்தி 12 Aug 2025 10:11 AM IST (Updated: 12 Aug 2025 10:52 AM IST)
t-max-icont-min-icon

உரிய நேரத்தில் விமானத்தில் பற்றிய தீ அணைக்கப்பட்டதால் சேதம் தவிர்க்கப்பட்டதாக தகவல் வெளியானது.

சென்னை,

மலேசியாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த சரக்கு விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியானது. விமானத்தின் 4வது இன்ஜினில் தீ பிடித்ததாகவும், விமானத்தில் பற்றிய தீ உடனடியாக அணைக்கபட்டதாக்வும் செய்திகள் பரவியது. சரக்கு விமானத்தில் தீ பிடித்ததாக வெளியான தகவல் பயணிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சென்னை விமான நிலைய நிர்வாகம் அதனை மறுத்துள்ளது.

இதுதொடர்பாக விமான நிலைய நிர்வாகம் கூறுகையில், “ மலேசியாவில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானம் தரையிறங்கும் போது தீப்பிடித்ததாக வெளியான தகவல் பொய்யானது; தீ பாதிப்பு எதுவும் இல்லை .அதிகாலை 4 மணிக்கு அந்த விமானம் தரையிறங்கிய போது, ஓடுபாதையில் உராய்ந்து அதிகப்படியான புகை எழும்பியது. சரக்கு விமானங்கள் தரையிறங்கும் போது இது வழக்கமான ஒன்று” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


1 More update

Next Story