பெரியார் சிலை மீது காலணி வீச்சு: நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது


பெரியார் சிலை மீது காலணி வீச்சு: நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது
x
தினத்தந்தி 4 Feb 2025 6:47 AM IST (Updated: 4 Feb 2025 1:09 PM IST)
t-max-icont-min-icon

பெரியார் சிலை மீது காலணி வீசிய நாம் தமிழர் கட்சி பிரமுகரை போலீசா கைது செய்தனர்.

சென்னை,

சென்னை குமரன்நகர் பிள்ளையார் கோவில் தெருவில் பெரியார் சிலை உள்ளது. இந்தநிலையில் நேற்று மாலை வாலிபர் ஒருவர், அந்த பெரியார் சிலை மீது காலணியை வீசினார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அந்த வாலிபரை பிடித்து, குமரன் நகர் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணையில், காலணி வீசியது ஜாபர்கான் பேட்டையை சேர்ந்த நாம் தமிழர் கட்சி பிரமுகர் அஜய் (வயது 32) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். கைதான அஜய் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 18-ம் தேதி வரை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் பெரியார் குறித்து விமர்சித்தது சர்ச்சையானதும், அவர் மீது 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.


Next Story