சிவகங்கையில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து - 11 பேர் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம் கும்பங்குடி பாலம் அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
Published on

சிவகங்கை மாவட்டம் கும்பங்குடி பாலம் அருகே, காரைக்குடி நோக்கி சென்ற அரசுப் பேருந்தும், மதுரை நோக்கி சென்ற அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பெண்கள், ஒரு டிரைவர் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

சமீபத்தில் தென்காசியில் 2 பேருந்துகள் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com