தென்காசியில் அரசு வக்கீல் வெட்டிக்கொலை: மர்ம கும்பல் வெறிச்செயல்

செங்கோட்டை அரசு வக்கீலாக இருந்த முத்துக்குமாரசாமி இன்று காலை தென்காசி நடுபல்க் அருகே உள்ள தனது அலுவலகத்திற்கு வந்தார்.
தென்காசியில் அரசு வக்கீல் வெட்டிக்கொலை: மர்ம கும்பல் வெறிச்செயல்
Published on

செங்கோட்டை அரசு வக்கீலாக இருந்தவர் முத்துக்குமாரசாமி. அவர் இன்று காலை தென்காசி நடுபல்க் அருகே உள்ள தனது அலுவலகத்திற்கு வந்தார். அலுவலகத்தில் அவர் இருந்தபேது, கத்தி, அரிவாளுடன் வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டினர். இதில், அவரது முகம், கை, கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதற்குள் அந்த மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர்.

ரத்த வெள்ளத்தில் சரிந்துகிடந்த அரசு வக்கீல் முத்துக்குமாரசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக தென்காசி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் முத்துக்குமாரசாமி உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தென்காசி போலீசார், தப்பியோடிய கொலையாளிகளை தேடி வருகின்றனர். அரசு வக்கீல் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தென்காசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com