தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்

சிறு குற்றஙகளுக்கு சிறை தண்டனைக்கு பதிலாக அபராதம் விதிக்கும் மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்
Published on

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்துவது, சிறு குற்றஙகளுக்கு சிறை தண்டனைக்கு பதிலாக அபராதம் விதிக்கும் மசோதா உள்பட 9 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

அதேபோல், 2வது முறை நிறைவேற்றப்பட்ட தமிழக நிதி நிர்வாக பொறுப்புடைமை மசோதாவுக்கும் ஒப்புதல் அளித்துள்ளார். மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இவை அரசு நாளிதழில் வெளியிடப்பட்டு பின்னர் சட்டமாக அமலுக்கு வர உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com