கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்

கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.
சென்னை,
கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். இன்று காலை 6.50 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். அவருடன் கவர்னரின் தனி செயலாளர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் சென்றுள்ளனர்.
பிரதமர் அலுவலகம் அழைத்ததின் பேரில் கவர்னர் டெல்லிக்கு சென்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி செல்லும் கவர்னர் ஆர்.என்.ரவி, உள்துறை மந்திரி அமித்ஷா, சட்ட நிபுணர்களை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கவர்னர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட்டு காலக்கெடு விதித்த நிலையில், இன்று சுப்ரீம் கோர்ட்டிடம் ஆலோசனை கருத்தை பெறும் வகையில் 14 கேள்விகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story