சாத்தூரில் இசை கலைஞர்களுடன் பறை இசைத்து மகிழ்ந்த கவர்னர் ஆர்.என்.ரவி


சாத்தூரில் இசை கலைஞர்களுடன் பறை இசைத்து மகிழ்ந்த கவர்னர் ஆர்.என்.ரவி
x

பறை இசை வாத்தியங்கள் முழங்க கவர்னருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பத்மஸ்ரீ வேலு ஆசான், பாரதி பறை பண்பாட்டு மையத்தை துவங்கியுள்ளார். இந்த மையத்தின் திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வருகை தந்திருந்தார். அவருக்கு பறை இசை வாத்தியங்கள் முழங்க பத்மஸ்ரீ வேலு ஆசான் சிறப்பான வரவேற்பு அளித்தார்.

அங்குள்ள பறை இசை கலைஞர்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். அப்போது இசை கலைஞர்களுடன் சேர்ந்து ஆர்.என்.ரவி உற்சாகமாக பறை இசைத்து மகிழ்ந்தார். இதனை தொடர்ந்து பாரதி பறை பண்பாட்டு மையத்தை கவர்னர் ஆர்.என்.ரவி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

1 More update

Next Story