குரூப்-4 தேர்வு தோல்வி: மதுரையில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை


குரூப்-4 தேர்வு தோல்வி:  மதுரையில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
x

குரூப்-4 தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் என்ஜினீயர் யாரிடமும் பேசாமல் தனியாக இருந்துள்ளார்.

மதுரை,

மதுரை ஆனையூர் முடக்கத்தான் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகன் சந்துரு (வயது 21). என்ஜினீயரிங் படித்து விட்டு, டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு தயாராகி வந்த இவர், சமீபத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை எழுதி உள்ளார். நல்ல மதிப்பெண்கள் பெற்று பணிக்கு தேர்வாகி விடுவோம் என அவர் நம்பிக்கையுடன் இருந்திருக்கிறார்.

இந்நிலையில், குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளிவந்தன. ஆனால், அவர் எதிர்பார்த்ததைவிட குறைவான மதிப்பெண்களை சந்துரு எடுத்து இருந்ததாக தெரிகிறது. இதனால் மனவருத்தம் அடைந்த அவர் யாரிடமும் பேசாமல் தனியாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, அவர் தன்னுடைய அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தெரிய வந்ததும் போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டது அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெருத்த சோகம் ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story