சென்னையில் தூய்மை பணியாளருக்கு பாலியல் தொந்தரவு - முதியவருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்


சென்னையில் தூய்மை பணியாளருக்கு பாலியல் தொந்தரவு - முதியவருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
x

பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை,

சென்னை அயனாவரம் இப்ராகிம் ஷாகிப் மெயின் ரோடு அருகே பெண் தூய்மை பணியாளர் ஒருவர் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற முதியவர் ஒருவர், பெண் தூய்மை பணியாளரை நோக்கி ஆபாசமான செய்கை செய்து பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அந்த பெண் தட்டிக்கேட்ட நிலையில், அருகில் இருந்த பொதுமக்கள் அந்த முதியவரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரிடம் அந்த முதியவரை பொதுமக்கள் ஒப்படைத்தனர். இது குறித்த புகாரின் அடிப்படையில் போலீசார் முதியவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story