புகார் அளிக்க வந்த பெண்ணுடன் உல்லாசம்: போலீஸ் ஏட்டு பணியிட மாற்றம்

ஏட்டுவின் இருசக்கர வாகனத்தை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
விருதுநகர்,
விருதுநகர் மேற்கு போலீசில், கடந்த சில நாட்களுக்கு முன் கொடுக்கல், வாங்கல் தகராறு தொடர்பாக இளம்பெண் ஒருவர் புகார் அளிக்க வந்தார். அப்போது அந்த போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக பணியாற்றியவருக்கும், அந்த இளம் பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த பெண்ணின் வீட்டுக்கு ஏட்டு சென்றதாகவும், தனிமையில் இருந்த அந்த பெண்ணையும், ஏட்டுவையும் அந்த பெண்ணின் கணவர் கையும், களவுமாக பிடித்ததாகவும் தெரிகிறது. ஆனால் அங்கிருந்து ஏட்டு தப்பிச்சென்றார். இதையடுத்து அப்பகுதியினர் ஏட்டுவின் இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆமத்தூர் போலீசார் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு சென்று, ஏட்டுவின் இருசக்கர வாகனத்தை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், சம்பந்தப்பட்ட ஏட்டுவை, ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.






