கனமழை: ராமேசுவரம் கோவில் பிரகாரத்தில் தேங்கிய மழைநீர்


கனமழை: ராமேசுவரம் கோவில் பிரகாரத்தில் தேங்கிய மழைநீர்
x
தினத்தந்தி 20 Jan 2025 1:38 AM IST (Updated: 20 Jan 2025 2:11 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரத்தில் நேற்று பகலில் 2 மணி நேரம் பலத்த பலத்த மழை பெய்தது.

ராமேசுவரம்,

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. ராமேசுவரம் பகுதியிலும் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்றது.

ராமேசுவரம் பகுதியில் நேற்று காலை மழை பெய்தது. மதியம் 2 மணி அளவில் பலத்த மழையாக பெய்ய தொடங்கியது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக அங்கு தொடர்ந்து மழை பெய்தது. இதனால் ராமேசுவரம் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழைநீர், ராமநாதசுவாமி கோவிலில் அம்பாள் சன்னதி பிரகாரம் மற்றும் கோவிலின் மூன்றாம் பிரகாரம் உள்ளிட்ட இடங்களில் புகுந்தது. பிரகாரத்தில் தேங்கிய மழைநீரை கோவில் தூய்மை பணியாளர்கள், வாறுகால் வழியாக துரித கதியில் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அதுபோல் கோவிலின் ரத வீதி சாலை, திட்டக்குடி சந்திப்பு சாலை, நகராட்சி அலுவலகம் எதிரே தனுஷ்கோடி சாலை உள்ளிட்ட இடங்களிலும் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. மேலும் கனமழையால் ராமேசுவரம் பஸ் நிலையம் எதிரே தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஆஞ்சநேயர் கோவில் எதிரே உள்ள சாலையிலும் மழைநீர் குளம் போல் தேங்கியது.

1 More update

Next Story