ஆடு மாடு மேய்ப்பது அவமானம் அல்ல வெகுமானம்- சீமான் பேச்சு

மாடு வளர்க்க அவமானம் என்று நினைக்கும் நீங்கள் ஏன் பால் குடிக்கிறீர்கள்? என்று சீமான் பேசினார்
மதுரை,
நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பாக, "மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை" என்ற முழக்கத்தை முன்வைத்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், இன்று மதுரை விராதனூர் பகுதியில் ஆடு, மாடுகளின் மாநாடு நடைபெற்றது. ஆடு, மாடுகளோடு, அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் சீமான் பேசியதாவது:-
ஆடு மாடு மேய்ப்பது அவமானம் அல்ல வெகுமானம்.திருமால், பெருமாள், கண்ணன் ஆடு மாடு மேய்தனர். இயேசு, நபிகள் நாயகம் ஆடு மாடு மேய்தனர். கால்நடைகள் நம் உணர்வுடன் கலந்தவை. மாட்டுக்கு பொங்கல் வைத்தவன் தமிழன். இனி யாரையாவது திட்ட வேண்டும் என்றால் எருமை மாடு என்று திட்டாதீர்கள். ஆடு, மாடுகளைப் பற்றி கவலைப்படாத நீங்கள் ஏன் ஆவின் விற்பனை செய்கிறீர்கள்? மாடு வளர்க்க அவமானம் என்று நினைக்கும் நீங்கள் ஏன் பால் குடிக்கிறீர்கள்?" என்றார்,






