பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் எழுதப்பட்ட வார்த்தை அழிப்பு


பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் எழுதப்பட்ட வார்த்தை அழிப்பு
x

பொருநை அருங்காட்சியகத்தில் அழகிற்காக வைக்கப்பட்டுள்ள பாறையில் இந்தி எழுத்து எழுதப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

நெல்லை,

நெல்லை மற்றும் தூத்துக்குடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு பணியின்போது போது கண்டறியப்பட்ட பொருட்களை வைக்க திருநெல்வேலியில் பொருநை அருங்காட்சியகம் பிரமாண்டபமாக உருவாகியுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 21ந் தேதி திறந்து வைக்க உள்ளார். இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்த நிலையில், பொருநை அருங்காட்சியகத்தில் உள்ள புல்வெளியில் அழகிற்காக வைக்கப்பட்டுள்ள பாறையில் இந்தியில் ராம் என எழுதி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அருங்காட்சியகத்தில் பணியாற்றும் வடமாநிலத்தவர்கள், பெயிண்ட் மூலம் பாறையில் இந்தியில் ராம் என எழுதியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, வடமாநிலத்தவர்களை வைத்தே அரசு அதிகாரிகள் இந்தி எழுத்துகளை அழித்தனர்.


1 More update

Next Story