சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
x
தினத்தந்தி 2 Dec 2025 7:42 PM IST (Updated: 2 Dec 2025 9:39 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. சென்னையில் இருந்து 40 கி.மீ தொலைவில் வலுவிழந்த டிட்வா புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. தமிழகம்- புதுச்சேரி கடற்கரைகளில் இருந்து 25 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது.

இதன் காரணமாக இன்று ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்ளுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. சென்னையில் இன்று காலை முதலே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது.

தொடர் மழை காரணமாக சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூரிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story