கனிமொழிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பிறந்த நாள் வாழ்த்து


கனிமொழிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பிறந்த நாள் வாழ்த்து
x
தினத்தந்தி 5 Jan 2026 10:23 AM IST (Updated: 5 Jan 2026 11:57 AM IST)
t-max-icont-min-icon

பிறந்த நாளை முன்னிட்டு கனிமொழிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

சென்னை,

திமுக எம்பி கனிமொழிக்கு அமித்ஷா பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக துணை பொதுச்செயலாளரும் தூத்துக்குடி தொகுதி திமுக எம்பியுமான கனிமொழி இன்று தனது 58-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு கனிமொழிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, தொலைபேசி வாயிலாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.முன்னதாக பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


1 More update

Next Story