ஐதராபாத் - கொல்லம் வாராந்திர சிறப்பு ரெயில், ஈரோடு வழியாக இயக்கம்


ஐதராபாத் - கொல்லம் வாராந்திர சிறப்பு ரெயில், ஈரோடு வழியாக இயக்கம்
x

வாரந்தோறும் சனிக்கிழமை ஐதராபாத்தில் இருந்து ரெயில் புறப்படுகிறது.

ஈரோடு,

பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. எனவே பயணிகளின் வசதிக்காக ஐதராபாத் - கொல்லம் (வண்டி எண்:- 07193) வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 11.10 மணிக்கு ஐதராபாத்தில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை காலை 7.10 மணிக்கு கொல்லம் சென்றடைகிறது. அடுத்த மாதம் (ஜூன்) 28-ந் தேதி வரை 6 முறை இந்த ரெயில் இயக்கப்படுகிறது. ஈரோட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 8.20 மணிக்கு ரெயில் வந்து 8.30 மணிக்கு கொல்லம் நோக்கி புறப்படுகிறது.

இதேபோல் மறுமார்க்கமாக கொல்லம் - ஐதராபாத் (07194) சிறப்பு ரெயில் திங்கட்கிழமை காலை 10.45 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படுகிறது. ஈரோட்டுக்கு இரவு 8.20 மணிக்கு வந்து, 8.30 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரெயில் வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு ஐதராபாத்துக்கு சென்றடைகிறது. அடுத்த மாதம் (ஜூன்) 30-ந் தேதி வரை 6 முறை சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story