கோவை விமான நிலையத்தில் ரூ. 7 கோடி மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்

கஞ்சா கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கோவை விமான நிலையத்தில் ரூ. 7 கோடி மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்
Published on

கோவை சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து ஹைட்ரோபோனிக் கஞ்சா என்ற உயர் ரக கஞ்சா கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலை தொடர்ந்து பயணிகளிடம் தீவிர சோதனை நடைபெற்றது. அப்போது, சிங்கப்பூரில் இருந்து இன்று கோவை வந்த விமானத்தில் பயணித்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, பயணிகள் 2 பேர் ஹைட்ரோபோனிக் கஞ்சாவை கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, பயணிகளிடமிருந்து சுமார் 7 கிலோ எடையுள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 7 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட பயணிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இருவரும் கேரளாவை சேர்ந்த முஜீப், சுகைல் உயபத்துல்லா என்பது தெரியவந்தது. கஞ்சா கடத்தி வந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com